tamilnadu

நாமக்கலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல், ஜூலை 19– கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் பல்வேறு முன்னோடி தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி பேசுகையில், மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது.

இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்களும், வணிகர்களும், தொழில் முனைவோர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்க ளில் பணிபுரிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் வரும்போது அவர்கள் இ -பாஸ் அனுமதி பெற்று அழைத்து வரவேண்டும். அவ்வாறு வருபவர்களை அரசு அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்து வதன் மூலம்தான் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப் படுத்த முடியும் என்று தெரிவித்தார்.  

இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார், திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.சித்ரா உள்பட வட் டாட்சியர்கள், வணிகர் சங்கத்தினர், ஜவுளித்தொழில் முன் னோடிகள், லாரி உரிமையாளர்கள், முட்டை உற்பத்தியா ளர்கள், ரிக் உரிமையாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.