tamilnadu

img

சிதம்பரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

சிதம்பரம், மார்ச் 18 - கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்வ தற்கான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் தலைமை தாங் கினார்.  நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா முன்னிலை வகித்தார்.  காவல்துறை டி.எஸ்.பி. ஜவகர்லால், சிதம் பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழரசன், அண்ணாமலை பல்கலைக்கழக நுண் உயிரியல் பேராசிரியர் குண சேகரன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத் து வமனை கண்காணிப்பாளர் சண்முகம், சிதம்பரம் நக ராட்சி பொறியாளர் மகா தேவன் ஆகியோர் பங்கேற்றனர். சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் பேசுகையில், ‘தொற்று நோய் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே முக கவசம் அணிந்தால் போது மானது. அனைவரும் அணியத் தேவையில்லை.  வெளியிலிருந்து வருப வர்கள் வீட்டுக்குச் செல்லும் போதும், வீட்டிலிருந்து வெளியே வரும்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.  விடுதிகளில் தற்போது தங்கியுள்ள வெளி நாட்டினர் பற்றிய விவரங் களை உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். திருமண மண்டபங்க ளில் ஏற்கனவே அனு மதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர புதிதாக எந்த நிகழ்ச்சி  களையும் நடத்த அனு மதிக்கக்கூடாது. ஒவ்வொரு அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பற்றிய விவரங்களை எடுத்துக் கூற வேண்டும். கோயில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் முடிந்தவரை ஒரே நுழைவாயிலாக வைத்து அதன் வழியாக வரும் பொதுமக்களை பரி சோதனை செய்து அனுப்ப வேண்டும்.  நோய்தொற்று அறிகுறிகளுடன் பொது மக்கள் எவரேனும் மருந்த கங்களுக்கு சென்று மருந்து கேட்டால் மாத்திரைகளை மருத்துவர்கள் அனுமதி யின்றி வழங்கக்கூடாது என்றும் சார் ஆட்சியர் தெரி வித்துள்ளார்.