tamilnadu

img

வலங்கைமான் ஒன்றியக் கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஜூலை 26- திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியத்தில் உள்ள விருப்பாச்சி புரம், ஆதிச்சமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நத்தம் பாலத்திலிருந்து வேதாம் புரம் ஆதிதிராவிடர் தெருவிற்கு செல் லும் பழுதடைந்த மண் சாலையை, தார்ச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். வேதாம்புரம், விருப்பாச்சி புரம், பாதிரிபுரம் உள்ள அனைத்து தெருவுக்கும் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். பாதிரிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இந்தியன் மார்க் பம்பு அமைக்க வேண்டும். சேதமான மின் கம்பங்கள் அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கட்சியின் சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு வேதாம்புரம், பாதிரிபுரம் கிளை செயலாளர்கள் ஜி.சுரேஷ், ஆர். பரமகுரு ஆகியோர் தலைமை தாங்கி னர். கோரிக்கைகளை விளக்கி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா கண்டன உரையாற்றி னார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் என். பாலையா, சி.கருப்பையன் கே.கலிய பெருமாள், ஆர்.ஜெ.நடராஜன், நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக ஊராட்சி ஒன்றிய அலு வலரிடம் கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது அதனை பெற்றுக் கொண்ட அதிகாரி உடனடியாக பாதிரி புரம் ஆதிதிராவிடர் தெருவிற்கு இந்தி யன் மார்க் பம்பு அமைப்பதற்கு தேவை யான இடுபொருட்களை உடனடியாக அனுப்பி வைத்தார். மற்ற கோரிக்கை களை ஆய்வு செய்து நிறைவேற்றுவ தாக கூறினார்.