tamilnadu

img

அகரதிருமாளம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டிடம்

குடவாசல், செப்.12-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் அகரதிருமாளம் ஊராட்சி யில் பொதுமக்களின் அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வியா ழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் மாரி.செல்வராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மக்களின் கோரிக்கையை வலி யுறுத்தி உரை நிகழ்த்தினார். பூந் தோட்டம் கடைத்தெருவில் ஆயிரக்க ணக்கான மக்கள் வந்து செல்லும் கடை வீதி பகுதியில் பொது மக்களின் சுகா தாரம் பேணும் வகையில் பொது சுகா தார கழிவறை கட்டித் தர வேண்டும்.  சந்தப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுத டைந்து ஆபத்தான நிலையில் உள்ளது, மாணவர்கள் அச்சத்துடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர் மாண வர்கள் நலன் கருதி புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். அகரதிருமாளத்தில் இறந்தவர் களின் இறுதிச் சடங்கு செய்யும் ஈமக் கிரியை கட்டிடம் கட்டி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது, உடனடியாக கட்டிட வேலை துவங்கி  ஈமக்கிரி கட்டி டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு கோரி க்கையை வலியுறுத்தி பூந்தோட் டத்தில் உள்ள அகரதிருமாளம் ஊராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி. வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பி னர் தியாகு.ரஜினிகாந்த், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தர மூர்த்தி, கே.எம்.லிங்கம்,டி.பி.ராஜா வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன்,ஒன்றிய தலைவர் பாலா மற்றும் சரவணா, தீக்கதிர் கண் ணன், சேட் இப்ராஹிம், கண்ணன் உள்பட ஏராளமான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.