மன்னார்குடி, மே 10- மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி திறக்க வேண்டுமென மன்னார்குடியில் செயல் பட்டு வரும் பொதுநல அமைப்புகள் மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலை மை மருத்துவமனையில் தினந்தோறும் மனனார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல் லூர் ஆகிய தாலுகா பகுதி யிலிருந்து பல்லாயிரக்க ணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு உடனடியாக நோயாளி களுக்கு செலுத்திட ரத்தம் தேவைப்படுகிறது. இம்மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாத நிலை யில் திருவாரூர் சென்று ரத்த தானம் கொடுத்து, அங்கி ருந்து தான் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு வரப்படு கிறது.
மன்னார்குடியில் ரத்த தானம் செய்ய பலர் முன் வந்தாலும் ரத்த வங்கி இல்லா ததால் மிகுந்த சிரமங்களை நோயாளிகளும், பொதுமக்க ளும் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை யில் ரத்த வங்கி துவங்கு வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்க பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதத்தை ஆய்வுக் குழுவினர் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தரவில்லை. எனவே தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் உடனடியா கத் தலையிட்டு சென்னை யில் உள்ள எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கத்தின் ஒப்புதல் கடிதத்தை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிடுவதுடன், ரத்த வங்கியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென மன்னார்குடியில் செயல்பட்டு வரும் பொதுநல அமைப்புகள் மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது.