tamilnadu

img

கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடக் கோரி போராட்டம்

குடவாசல், மார்ச் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொர டாச்சேரி ஒன்றியக்குழு சார்பாக கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட கோரி தொடர் முழக்கப் போராட்டம் வெட்டாறு பாலம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில், மடங்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போ ருக்கும், நிலங்கள் குத்தகை சாகுபடி செய்ப வர்களுக்கும், நியாயமான விலையை நிர்ண யம் செய்து அந்த தொகையை தவணை முறை யில் பெற்று நீண்ட காலம் பயன்படுத்தி வரு வோர்களுக்கு அந்த இடங்களை சொந்த மாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றி யச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.கந்தசாமி கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், கே.கோபிராஜ்,பி.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் கே.வி. ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி,கனகசுந்தரம் எழுதி வீர சேகரன் என்.ராஜேந்திரன் நகர செயலாளர் சி,செல்லத்துரை உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே தமிழ்மணி சிறப்புரையாற்றினார்.