திருத்துறைப்பூண்டி, மார்ச் 8- கோவில் நிலங்களில் குடியிருப்போ ருக்கு குடிமனை பட்டா வழங்க கோரி தமி ழகம் முழுவதும் நீண்ட நெடிய காலமாக தொடர்ந்து பல போராட்டங்களை மார்க் சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. அதை யொட்டி அண்மையில் தமிழ்நாடு அர சாங்கம் பட்டா வழங்குவதற்கான 318 வது அரசாணையை வெளியிட்டது. இந்த அர சாணையை அமல்படுத்தக் கூடாது என்று சில அமைப்புகள் நீதிமன்றம் சென்று தடை யாணை பெற்றனர். இதனால் அரசாணை நிறுத் திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட அரசாணை யின் அடிப்படையில் குடிமனை பட்டா வழங்கிட தமிழக அரசசை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி திருவாரூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நகர தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட் டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைபூண்டி ஒன்றிய நகரம் சார்பில் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திட கலந்தாலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகு ராமன், ஒன்றிய செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்திட ஆலோசிக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களை திரட்டிட முடிவு செய்யப்பட்டது.