tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்

திருவாரூர், அக்.13- மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென திருவாரூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட சிறப்பு பேர வைக் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமையன்று திரு வாரூரில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். முகமது சலாவுதீன் தலைமையேற்றார். மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோ வன் வரவேற்று பேசினார். மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார் “வேலை யின்மையை தடுத்து நிறுத்தி புதிய வேலை வாய்ப்பை உருவாக்கு” என்ற தலைப்பிலும், மாநில பொருளா ளர் தீபா “ஹிந்தியை திணிக்காதே- புதிய கல்விக் கொள்கையின் அவ லம்” என்ற தலைப்பில் உரையாற்றினர்.  மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு சங்கத்தின் எதிர்கால கடமைகள் குறித்து எடுத்துரைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் இ.மைதிலி, மாவட்ட துணைத் தலை வர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.எஸ்.செந்தில், ஏ.கே.வேலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். வேலையின்மை யை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும், புதிய கல்விக் கொள்கை யை கைவிட வேண்டும், பொருளா தார மந்த நிலையை சீர்படுத்த தவ றான பொருளாதார கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.