மன்னார்குடி, அக்.20- பருவ மாறுதலால் புவி வெப்பம் உயர்வதைத் தடுக்கவும், காற்றுச் சூழலை பாதுகாக்கவும் வங்கிகள் தங்களது முதலீட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டுமென தோகா வங்கி சிஇஓ சீதாராமன் வலி யுறுத்தினார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு வங்கிகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு சீதாராமன் பேசுகையில், தோகா வங்கியைப் பொறுத்த வரை தாள் இல்லா வங்கி நடைமுறைகளை கையாள்வ தாகவும், கணினி மூலம் பரிவர்த்தனை செய்வதற்காக கிரீன் அக்கவுண்ட, கிரீன் கிரெடிட், கிரீன் ரெமிடன்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தோகா வங்கி சிஇஓ.பேசினார். மேலும் அவர் பேசுகையில், வங்கி நடவடிக்கைகளை மாற்றியமைப்பதன் மூலம் கரியமில வாயுவை குறைப்பதில், வங்கிகள் தங்களது முதலீட்டிற்கு ஏற்ப ஒரு தொகையை கட்டாயமாக ஒதுக்கி வைப்பதை போல் பசுமை வங்கி, அல்லது தூய்மை மேம்பாட்டு முறை கள் என்ற வகையில் அதிகபட்சம் 10ரூ தொகையை பசு மைக்காக ஒதுக்க வேண்டும் என கூறினார்.