tamilnadu

அவசர கதியில் தூர்வாரும் பணிகள் சிபிஎம் கண்டனம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 22- மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முருகம்பாளையத்தில் கிராம பேரவை நடைபெற்றது. கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் தலைமை தாங்கி னார்.  மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஒன்றிய செய லாளர் டி.வி.காரல்மார்க்ஸ், ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.வேதையன் உள்ளிட்டோர் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இதில் கிராம மக்கள் கூறுகையில், 100 நாள் வேலை என்பது தொடர்ந்து இந்தப் பகுதியில் வழங்கப்படுவது கிடை யாது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டு தற்போது தண்ணீர் வந்த நிலையில் வாய்க்கால்கள் இன்னும் தூர்வா ரப்படாமல் உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் முருகம் பாளையம் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.  குடிமராமத்து பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் அரசு அதிகாரிகள் 80 சதவீத பணி முடிந்ததாக தெரிவிக்கிறார்கள். தற்போது குடிமராமத்து பணிகள் அவசர கதியில் நடைபெறுகிறது. ஊரடங்கால் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டில் இருக்கக் கூடிய அவலநிலை உள்ளது. அதனால் 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். அதே போல் 100 நாள் சம்பளத்தை கேரளாவில் வழங்குவது போல் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.  மக்களின் இந்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சேர்ப்பதாக ஐ.வி.நாகராஜன் உறுதியளித்தார்.