tamilnadu

img

பேரளம் பேரூராட்சியின் அலட்சியத்தால் மாணவர்கள், மக்களுக்கு தொற்று நோய் அபாயம்

குடவாசல், பிப்.19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் பேரூராட்சி நிர்வா கத்தின் அலட்சியம் காரணமாக ஆதி திராவிட மாணவர் விடுதி மற்றும் பிற் படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளின் அருகே கழிவுநீர் தேக்கத்தால் தொற்று நோய் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இதையைடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக திங்கள் கிழமை நடைபெற்ற கள ஆய்வையொட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியான கனரா பேங்க் அருகில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப் பட்ட மாணவர் விடுதி உள்ளன. இந்தப் பகுதியின் அருகில் உள்ள வணிக வளா கம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதனை முறையாக பேரூராட்சி நிர்வா கம் சுத்தப்படுத்தாமல் இருப்பதால் அடிக்கடி அடைப்பு உண்டாகி துர் நாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேங்கி நிற்ப தால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வா கத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை கழிவுநீர் வாய்க்கால் அடைப்பை சுத்தப்படுத்தாமல் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலையில் உள்ளது.
சிபிஎம் போராட்ட அறிவிப்பு
இதுபற்றி பொதுமக்கள் முறை யிட்டதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், பி.ஸ்டா லின், மனோகரன், நகர செயலாளர் சீனி. ராஜந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். சுகாதாரக் கேடான நிலையில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீரை அப்புறப்படுத்தி அடைப்பை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் பேரளம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் கூறினார்.