tamilnadu

பாதுகாப்பற்ற நிலையில் வங்கி ஏடிஎம் மையங்கள்

திருவாரூர், மே 26- கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏடிஎம் மையங்களும் முக்கியமான இடமாக இருக்கும் என்பதால் அதனை பயன்படுத்தக் கூடிய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம் மையங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்து கிறது.  ஆனால் பெரும்பாலான இடங்களில் காவலர்கள் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் தான் ஏடிஎம் மையங்கள் உள்ளன. மேலும் கொரோனா காலத்தில் வங்கிகளின் சார்பில் கிருமிநாசினி வைக்கப்படவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் அச்சத்து டனே ஏடிஎம் மையங்களுக்கு செல்கின்றனர். தனியார் பராமரிப்பில் ஏடிஎம் மையங்கள் இருப்பதால் அவர்கள் பாதுகாவலர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்ற நெருக்கடி களின் காரணமாக ஏடிஎம் மையங்களை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனங்கள் வங்கிகளோடு செய்து கொண்ட ஒப்பந்தம் முடிந்தபடியால் இந்த பணியை கைவிட்டு விட்டனர்.  இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இதனால் பணி இழந்துள்ளனர். எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி ஏடிஎம் மையங்களை பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.