குடவாசல், ஜூலை 8- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் மகி ழஞ்சேரியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து விலகி 100 இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தில் இணைந்தனர். நன்னிலம் ஒன்றியம் மகிழஞ்சேரியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விலகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.முகமது சலாவுதின் முன்னிலையில் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இணைந்த இளைஞர்களை வரவேற்று மாவ ட்டத் தலைவர் எஸ்.முகமது சலாவுதின் வாலிபர் சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கி பேசினார். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமான் வாலிபர் சங்கத்தின் வெண்கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவரும் சங்கத்தின் ஒன்றிய செயலா ளருமான பி.ஜெயசீலன் இளைஞர்களை வரவேற்று பேசினார்.