திருவண்ணாமலை, ஏப்.9-
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக திருவண்ணாமலையி லுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திங்களன்று(ஏப்.8) இரவு, கவிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சையில் கவிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து கவிதாவிற்கு ரத்தம் குறைவாக உள்ளதாகவும், ரத்தம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிதாவின் உடல் நிலை மோசமாக உள்ளது என, கவிதாவை அரசு மருத்துவமனைக்கு ஆட் டோவில் அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் கவிதாவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் கவிதா உயிரிழந் ததாகவும், அதை தங்களுக்கு தெரிவிக்காமல், கவிதாவின் உடலை, ஆட் டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என, விசாரணை நடத்த வேண்டும் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.