திருவண்ணாமலை, அக்.1- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கெங்கவரம் கிராம சாலைகளில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. தலித் மக்கள் வசிக்கக் கூடிய தெருக்களில் மழைநீர் தேங்கி, கழிவு நீராக மாறியுள்ளது. இதனால் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.