tamilnadu

கரும்பு விவசாயிகளின் முத்தரப்பு பேச்சவார்த்தை ஒத்திவைப்பு

திருவண்ணாமலை, பிப். 12- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரைபூண்டி கிராமத்தில் தரணி சக்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த  சக்கரை ஆலை 2018 - 19ஆம் ஆண்டு  கரும்பு அரவை அனுப்பிய விவசாயி களுக்கு, 26 கோடி ரூபாய் தராமல் பாக்கி  வைத்துள்ளது. மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரை, மாநில அரசு அறிவித்த விலை 65 கோடி ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் 2005 - 2009 ஆண்டு வரை,  லாபத்தில் ஈவுத் தொகையாக விவசாயி களுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 11 கோடி யும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கம் பலகட்ட போராட்டங் களை நடத்தியுள்ளது. வட்டாட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் மூலம் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, விவசாயிகளுக்கு விரை வில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலை வர் பலகட்ட முயற்சி எடுத்தும், விவசாயி களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை  இதுவரை வழங்காமல் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அலட்சியம் காட்டி வரு கிறது. தற்போது, 2019- 20 ஆம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு இன்னும் ஆலை திறக்  கப்படவில்லை. நடப்பு அரவை பருவத் திற்கான கரும்பை கடந்த 15 மாதங்களாக விவசாயிகள் வெட்டாமல் உள்ளதால் கவலை யடைந்தள்ளனர். எனவே, நடப்பு அரவை  கரும்பினை, கூட்டுறவு சர்க்கரை ஆலைக ளான, செய்யாறு மற்றும் வேலூர் மாவட்டம்,  திருவலம் அம்முண்டி சர்க்கரை ஆலை களுக்கு கரும்பு வெட்டி அனுப்ப உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட  ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.26.00 கோடி தொகை குறித்தும்,  தரணி சர்க்கரை ஆலை எல்லைக்கு உட்  பட்ட பகுதிகளில் 2019-2020ஆம் ஆண்டு சாகு படி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிர் அறு வடை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கை குறித்தும், வெள்ளியன்று (பிப். 14) காலை 11.00 மணியளவில் முத்தரப்பு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்க ளுக்காக வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்  பதை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்த சாமி தெரிவித்துள்ளார்.