tamilnadu

img

ஹெல்மெட் வழக்கில் தீவிரம் காட்டும் காவல்துறை கந்துவட்டியை ஒடுக்க ஆர்வம் காட்டாதது ஏன்?

திருவண்ணாமலை, ஜூலை 1- ஹெல்மெட் அணியாமல் செல்பவர் களை பறந்து பறந்து பிடித்து வழக்குப்போடும் காவல்துறை, கந்துவட்டியை ஒடுக்க ஒரு நட வடிக்கையும் எடுக்காதது ஏன் என்று,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும்  கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்கவும், மாவட்ட விவசாயிகளையும், நீர் நிலைகளை யும் பாதிக்கும் எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திங்களன்று (ஜூலை 1)  மாவட்டச் செயலாளர் எம்.சிவக் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கே.பால கிருஷ்ணன் பேசியதாவது:  மகளிர் சுய உதவி  குழுக்களில் உள்ள பெண்களுக்கு அரசோ, அர சுடமையான வங்கிகளோ நேரடியாக கடன் வழங்காமல் தனியார் நிறு வனங்கள் நுண்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) வழங்குகின்றன. அப்படி வழங்குகின்ற கடனை வசூலிக்க மோச மான நடைமுறையை தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள் கின்றனர். கடன் பெறும் பெண்களை  அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். பல நகரங்களில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ராசி வட்டி என, 100 ரூபாய்க்கு நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. இப்படி கடன் வாங்கிய  ஏழை, எளிய  சுமைப்பணித் தொழிலாளர்கள் வருடக் கணக்கில் வட்டி செலுத்துகின்றனர். கந்து வட்டி வாங்கினால் தலைமுறை, தலை முறையாக அந்த கடன் தொடர்கிறது.   திருவண்ணாமலையில் கந்து வட்டிக்கு பணம் வாங்கிய ஆட்டோ ஓட்டுநர் மொய்தீனின் குடும்பத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் இழிவாகப்பேசியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு   காவல்துறையினரும் பக்கபலமாக இருந்துள்ளனர். புகார் கொடுத்தவரையே கைது செய்து  எழுதி வாங்கியுள்ளது காவல்துறை.  இதுதான் காவல்துறையின் வேலையா?  கந்து வட்டி தடைச் சட்டம் 2003, இயற்றப்பட்டு இருந்தாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அந்த சட்டத்தை அமலாக்க காவல் துறையினர் தயாராக இல்லை. சாமானிய மக்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறை, கந்து வட்டிக்காரர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறது. இச்சட்டத்தை இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு நபர் மீது கூட, அந்த வழக்கு பதிவு செய்யப்பட வில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்கு தீவிரம் காட்டும் காவல் துறையினர், அதில் 10 சதவீதம் கூட  கந்துவட்டியை தடுக்க ஆர்வம் காட்டவில்லை.   கந்துவட்டி கொடுமை மலிந்து கிடப்பதால் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இமாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  இதற்கு கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டுறவு சொசைட்டிகளில் விவசாயிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் வாழ்வாதார கடன்கள் வழங்கப்படுகிறது.  அதனால் அங்கு, கூட்டுறவு சொசைட்டிகள், நாணய சங்கங்கள் வலுவாக செயல்படுகின்றன. கேரளாவில், கந்து வட்டி பிரச்சனையில், நகைக் கடன் களில் சிக்கியுள்ள மக்களை மீட்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆனால் தமிழகத்தில் கந்து வட்டி  தடைச் சட்டம் மட்டும்தான் இருக்கிறது. அந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இந்த மாவட்டத்தில் அதிகப்படி யான கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டவிரோதமாக  கருக்கலைப்பு  மையங்கள் செயல்படு கிறது என்பதை அறிந்து, அந்த  மையங் களை தடை செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தை, கட்சியின் சார்பில் பாராட்டினோம். அதேசமயம்,  கந்துவட்டி பிரச்சனையில், மக்களை பாதுகாக்காமல், கந்து வட்டிக்காரர் களுக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட காவல் துறையை கண்டிக் கிறோம். எங்கு கந்துவட்டி கொடுமை நடந்தாலும் அங்கு செங்கொடி இயக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு  துணை நிற்கும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன்  பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்டோர் பேசினர்.