திருவண்ணாமலை, பிப். 9- திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் கள் சங்கத்தின் 7ஆவது மாநிலப் பிரதிநிதித்துவ பேர வைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு, சாலைப் பணியாளர்க ளின் வாழ்வாதார கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 13ஆம் தேதி தமிழக முதல்வர், அரசு செயலாளர், முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர் ஆகி யோரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கம் நடத்து வது. பிப்ரவரி 15 முதல் பிப்ர வரி 24 வரை ஊழியர் சந்திப்பு, பிரச்சார இயக்கம், பிப்ரவரி 25ஆம் தேதி உட் கோட்ட சங்க அமைப்பின் மூலம் கோரிக்கை மனுக் களை தபாலில் அனுப்பும் இயக்கம் நடத்துவது. மார்ச் 12ஆம் தேதி கோட்டப் பொறியாளர்கள் மூலம், கோரிக்கை மனுவை அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி மனு அனுப்பும் இயக்கம் நடத்துவது, ஏப்ரல் 29ஆம் தேதி சாலைப் பணி யாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி 7 மண்டலங்க ளில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது, சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அரசு ஏற்று நடத்தக் கோரி ஜூன் 13 முதல் ஜூன் 24 வரை இரண்டு சக்கர வாகனத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது, சாலைப் பணியாளர்களின் பணிநீக்க நாளான, செப்டம்பர் 7ஆம் தேதி சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தி அரசு செயலர், முதன்மை இயக்குனர், தலைமைப் பொறியாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.