திருவண்ணாமலை, ஜுன் 14- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிறன்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட் டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நாவல்பாக்கம், காட்டாம்பூண்டி, கிழக்கு ஆரணி திருவண்ணாமலை நகரம் உள்ளிட்ட பகுதி மக்களிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் பிறந்து 54 நாட்களே ஆன பெண் குழந்தை உட்பட 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி யாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 672ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்தனர்.