திருவண்ணாமலை, மார்ச் 24 - திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவமனையில் 100 படுக்கைகளுடன் கொ ரோனா வைரஸ் நோய்க் கான சிறப்பு தனிப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.சு.கந்த சாமி தெரிவித்தார். இது குறித்து செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:- வெளிநாடுகளில் இருந்து 123 பேர் சென்னை, திருச்சி, கோவை விமான நிலை யங்கள் வழியே திரு வண்ணாமலை மாவட்டத் துக்கு வந்துள்ளனர். இவர்க ளில் இப்போது 70 பேர் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டு சுகாதாரத் துறை மூலம் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் திருவண்ணா மலை மாவட்ட எல்லை களிலும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. செய்யாறு சிப்காட் வளாக ஊழியர்க ளின் நலன் கருதி மார்ச் 31 ஆம் தேதி வரை ஊதியத்து டன் கூடிய விடுப்பு அளிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க் கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட எல்லை களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவாய்த் துறை குழு, மருத்துவக் குழு, காவல்துறை குழு ஆகிய குழுக்கள் மூலம் கண் காணிக்கப்படும். பொது மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்க ளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் நடமாடக் கூடாது. வெளியில் நட மாடாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். இது தான் கொரோனா வைரஸ் நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வ தற்கான சிறந்த சிகிச்சை. கொரோனா வைரஸ் நோய்க்கான ஆய்வகப் பரி சோதனை முடிவு 24 மணி நேரத்தில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.