tamilnadu

சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி படுகாயம்

திருவண்ணாமலை,மார்ச்.2- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடி பகுதியை சேர்ந்த வர் முனியம்மாள் ( 65). இவர் திங்களன்று(மார்ச் 2)  காலை 7 மணிக்கு சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டர் பற்ற வைத்துள்ளார். அப்போது தீ அதிகளவில் பரவியதால் தீ கொழுந்து விட்டு எரிந்து  வீடு முழுவதும் எரிந்தது. இதில் சிலிண்டர் வெடித்ததில் முனியம்மாள்  மற்றும் அவரது கணவர் சின்னப்பன் வயது 75 ஆகியோர் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து முனியம்மாள் மற்றும் சின்னப்பனை அக்கம்  பக்கத்தினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீ வீடு  முழுவதும் எரிந்ததில் வீட்டில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள்  அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு  சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இது குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.