tamilnadu

ஊரகவளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புக

 திருவண்ணாமலை, ஜூன் 15- தமிழ் நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க பெரணமல் லூர் வட்டார மாநாடு கிளைத் தலைவர் வெங்கேடேசன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.பிரபு மாநட்டை துவக்கி வைத்துப் பேசினார். செயலாளர் குமார் வேலை அறிக்கை யையும், பொருளா ளர் ஜீவா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். காலியாக ஊள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநிலத் தலைவர் எம்.சுப்ரமணியன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் குப்புசாமி, சத்துணவு ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் சேட்டு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.