திருவள்ளூர், அக். 21 மாநில அளவில் வரு வாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க த்தின் மத்திய செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (அக். 18) திருவள்ளூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கே.குமரேசன் தலைமை தாங்கினார்.. திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏ.மணிகண்டன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.பார்த்திபன் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து பேசினார். மாவட்ட ஆட்சி யர் மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டு வாழ்த்திச் பேசினார். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிட ங்களை காலதாமதம் செய்யாமல் உடனே நியமனம் செய்ய வேண்டும், ஜாக்டோ - ஜியோ சார்பில் 9 நாள் நடைபெற்ற போரா ட்டத்தை வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும், வரு வாய்த்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும், பதவி உயர்வு, பணி ஓய்வில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.