tamilnadu

img

காலிப்பணியிடங்களை நிரப்புக செங்கல்பட்டில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூலை 17-  மின்வாரியத்தில் காலியாகவுள்ள துப்புரவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியு றுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்வாரிய உத்தரவை உடனடியாக அமல்படுத்தி பகுதிநேர துப்புரவு  ஊழியர்களின் பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும், நீண்ட கால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், துப்புரவு பணி யாளர்களுக்கு  சம்பந்த மில்லாத  வேலைகளை  செய்திட நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பா ட்டத்தில் வலியுறுத்தப்ப ட்டன.  செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு வி.முனிவேல் தலைமை தாங்கினார்.  கோட்டச் செயலாளர் எம்.மயில்வாகணன், பொருளாளர் பன்னீர் செல்வம், இணைச் செய லாளர் தேவக்குமரன், எம்.மனோகரன், துணைத் தலைவர் செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின்  செயலாளர் என்.பால்ராஜ் நிறைவுரையாற்றினார்.