திருவண்ணாமலை, பிப்.4- திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, கடனில் சிக்கி விவசாயி தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணா மலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் வசித்து வரு பவர் சின்னராஜ் மகன் சக்தி (40) இவர் விவசாயத் தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தார். விவசாயத் தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் செவ்வாயன்று காலை, கடன் சுமையால் தவித்து வந்த விவசாயி சக்தி என்பவர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.