திருவண்ணாமலை, மார்ச் 1- திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு, தேன் பழனி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருவண்ணாமலை அடுத்த ஆவூர், வட அரசம்பட்டு, கீழ்நாத்தூர், காமராஜர் நகர், தேன்பழனி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல நபர்களிடம், தீபாவளி சீட்டு நடத்துவதாகக் கூறி பணம் வசூல் செய்துள்ளார். இப்படி கார்த்திகேயன் ரூ. 14 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தீபாவளி பரிசுப் பொருட்கள் தராமலும் கட்டிய பணத்தை திருப்பித் தராமல், இவர் ஏமாற்றி தலைமறைவாகி விட்டதாக, ஆவூர் கிரா மத்தைச் சேர்ந்த மரகதம் என்பவர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் கார்த்தி கேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.