திருவண்ணாமலை, செப்.26- மண்பாண்டம் மற்றும் நாட்டு ஓடு, நாட்டு செங்கல் தொழிலை பாதுகாக்க கோரி திரு வண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, ஒருங்கி ணைப்பாளர் கே.கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், கே. காங்கேயன், இரா.பாரி, எஸ்.தண்டபாணி, எம்.வீரபத்திரன், விதொச எம்.பிரகலநாதன், தீ.ஒ.மு பி.செல்வன், நிர்வாகிகள் எம்.கமலக்கண்ணன், எஸ்.ராமதாஸ், எம்.ரவி, நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். வரிவிலக்கு அளித்துள்ள பாரம்பரிய மரபு மண்பாண்டம், நாட்டு ஓடு, நாட்டு செங்கல் உற்பத்தி தொழில் செய்வோரின் ஜீவாதார உரிமையை பாதுகாக்க வேண்டும், பாரம் பரியமான மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி களில் மண்எடுக்க அரசு அனுமதித்திருக்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும், புதிய, புதிய உத்தரவுகளால், மண்பாண்ட தொழிலை முடக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர்.