திருவண்ணாமலை, ஜன.2- திருவண்ணாமலை சண்முகா தொழிற் சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் துரிஞ்சா புரம் ஊராட்சி ஒன்றியம் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 218 அலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணிக்கு வராத தால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட் டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்று பதி வான வாக்குகள் அனைத்தும் திருவண்ணா மலை டேனிஷ் மிஷின் பள்ளியில் வைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மையத்துக்கு கொண்டு வந்து வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.