திருவண்ணாமலை, பிப். 18- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜி (22). இவர் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தண்டராம்பட்டு காவல்துறையினர் விஜியை கைது செய்தனர். அதேபோல், தண்டராம்பட்டு வட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன்(30), அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராமு (எ) ராமசாமி ஆகிய இருவரும் அயல் மாநில மதுபாட்டில்களை கடத்தி விற்று வந்துள்ள னர். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மூன்று பேரையும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.