திருவள்ளூர், பிப்.10- திருவள்ளூர் நகராட்சி யில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சமுக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் நகராட் சிக்கு உட்பட்ட 3, 5 ஆவது வார்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அரசு மதுபானக் கடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கடைகளிலும் சட்ட விரோத மாக 24 மணி நேரமும் மது பானங்கள் விற்பனை செய் யப்படுவதாக கூறப்படு கிறது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாயை சிலர் கொள்ளையடிப்பதாக வும் கூறுகின்றனர். இந்த மதுக்கடையால், குழந்தைகளும், பெண்க ளும தினம் அச்சத்துடன் அவ்வழியாக சென்று வர வேண்டியுள்ளது. மேலும் இளைஞர்கள் மதுபயக்காத் தால் சமுக விரோத நபர்களு டன் சேர்ந்து தகாத செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக இவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்ற னர். சமீபத்தில், சம்பத் என்பவர் குடித்து விட்டு, மதுபான கடைக்கு அருகில் உள்ள கால்வாயில் விழுந்து இறந்துள்ளார். இவர் இறந்து 9 நாட்கள் கழித்து தான் உறவினர்களுக்கே தெரிந் தது. அதேபோல், பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவில் வசித்து வருகிறார் ராணி. அதேபகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ப வர், வீட்டுமனையை குறைந்த விலைக்கு கொடுக்கவில்லை எனக் கூறி ராணி மற்றும் இவரின் மகள் கோமதி ஆகியோரை அடியாட்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ராணி மற்றும் கோமதியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை தடுக்க வேண்டும். இதற்கு உடந்தை யாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா, சிபிஎம் வட்டச் செய லாளர் ஆர்.தமிழரசன், நகரச் செயலாளர் எம்.உதயநிலா ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று(பிப்.10) கோரிக்கை மனு அளித்த னர்.