tamilnadu

img

நிபந்தனைகளை மீறி கார் ஆலை தொழிலாளர்கள் பணிநீக்கம் பிரான்ஸ் நிறுவனம் அராஜகம்

திருவள்ளூர், ஜூலை 16-  இந்துஸ்தான் மோட்டார் கார் தொழிற்சாலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழி லாளர்களுக்கும்  மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  சென்னை கார் தொழிற்சாலை தொழி லாளர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று (ஜூலை-16) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் அருகில் உள்ள பட்டரை என்ற இடத்தில் பிர்லா குழுமத்திற்கு சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் கார் தொழிற்சாலை  கடந்த 21 ஆண்டு களாக இயங்கி வருகிறது. இதில் 173 தொழிலாளர்கள் கம்பெனி துவங்கிய காலத்திலிருந்து பணி யாற்றி வந்தனர். இவர்களை பிர்லா நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை யில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் செவ்வாயன்று (ஜூலை 16) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அ. சவுந்தரராசன் கூறியதாவது:- கார் நிறுவனம் துவங்குவதற்காக  விவசாயிகளிடமிருந்து மிகவும் மலிவான விலையில் நிலத்தை பெற்ற பிர்லா  நிறுவனத்திற்கு சில நிபந்தனையுடன் அரசு கொடுத்தது. தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும், மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.  ஆனால், இப்போது அதிக இலாபம் ஈட்டிய பிறகு, எல்லா நிபந்தனை களையும் மீறி பிர்லா நிர்வாகம் இந்துஸ்தான் பைனான்ஸ் கார் தொழிற்சாலையை  பிரான்ஸ் கம்பெனிக்கு விற்றுள்ளது.  கம்பெனியை வேறு நிறுவனத்திற்கு விற்கும் போது புதிய ஆட்களை நியமனம் செய்யாமல், பழைய ஆட்களையே வைத்து வேலை வாங்கப்படும் என அரசிடம் அனுமதி பெற்றனர். தற்போது ஒப்பந்த தொழிலாளர்க ளையும், அலுவலக ஊழியர்களை யும் வேலையை விட்டு  வெளி யேற்றியுள்ளனர். ஆட்குறைப்பு என்ற பெயரில் நிரந்தர தொழிலாளர்கள் 173 பேரையும் ஜூலை 2ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும்  மிகவும் துயரத்தில் உள்ளனர். இது குறித்து மாநில அரசிடம் தெரிவித்துள்ளோம் மற்றும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். வேறுயாரும் வந்து வேலை செய்யக் கூடாது என இடைக்கால தடையை நீதி மன்றம் விதித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம்  மனு அளிக்கப்பட்டு ள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஆர்டிஒ விசாரணை நடத்தியுள்ளதாகவும் அரசிற்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் பேசினார். என்றார். இந்த சந்திப்பின் போது சங்கத்தின் நிர்வாகிகள் ப.சுந்தரராசன், என்.பாலகுமார், கே.செங்குட்டுவன், ஸ்ரீராமன், பால முருகன், கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.