திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் அலுவலகம் அருகில் 1990ஆம் ஆண்டு முதல் 5 ஏக்கர் பரப்பள வில் இலங்கை அகதிகளுக்கான திறந்தவெளி முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு 920 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உள்ளனர். முகாமில் உள்ள சாலைகளின் இரு புறங்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் சாக்கடை கள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிக மாக உள்ளது. கடந்த 30-ஆண்டுகளாக முகாமில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவும் இந்த காலத்தில் குப்பைகளை கூட அகற்றாமல் உள்ளனர். தமிழர்கள் என்றாலும் அகதிகள் என்பதால்தான் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று அங்குள்ள மக்கள் ஆதங்கப்பட்டனர். இந்த பகுதிக்கென்று குப்பை அள்ளும் வண்டிகள் கூட இல்லை.
ஊரடங்கு காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டும் போதும், மின்சாரம் பாதிப்பு ஏற்படும் போதும் அதை சீரமைக்க முகாம் வாசிகளின் தங்கள் சொந்த பணத்தை கொண்டு சீரமைக்கப்படும் நிலை தான் உள்ளது என்றும் அந்த முகாமில் உள்ளளவர்கள் கூறுகின்றனர். பொருளாதார நெருக்கடி சிக்கியுள்ள அகதி கள், அரசு கொடுக்கும் உதவிகளால் காய்கறி கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை சமாளிக்க அருகில் உள்ள தொழிற்சாலை களில் வேலைக்கு சென்று வந்தனர். ஊரடங்கால் எந்த வேலையும் இல்லாமல் பசியோடு தவிக்கின்ற னர். “கோதுமை மாவு, எண்ணை ஆகியவற்றை அரசு கொடுத்தால் போதும் ரொட்டியாவது சுட்டு பசியை போக்கிக் கொள்வோம்” என்கிறார்கள், கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்து வியாபாரம் செய்தவர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும், குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -பெ.ரூபன்