திருவள்ளூர், ஜூன் 3சோழவரம் அருகில் உள்ள அலமாதி வெண்மணிநகரில் வெண்மணி படிப்பகம்துவக்க விழா ஞாயிறன்று (ஜூன் 2) நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டி.சரளா தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், பொருளாளர் எம்.கருணா, சிஐடியூ மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், எஸ்.எப்.ஐ மாவட்ட செயலாளர் தினேஷ், தமுசகச மாவட்ட பொருளாளர் ஆகியோர் சி.சுரேஷ் உட்பட பலர் பேசினர். முன்னதாக சிஐடியுநிர்வாகி கா.அமரேசன் வரவேற்றார். கே.பவளக்கொடி நன்றி கூறினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.மணி வெண்மணி படிப்பகத்தை திறந்து வைத்து பேசுகையில் கிராமத்தில் படிப்பகம் துவங்குவது என்பது வரவேற்கத்தக்கது. நாட்டு நடப்புக்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாம் எதை விரும்புகிறோமோ அந்த புத்தகத்தை படித்து அறிவை விருத்தி செய்ய வேண்டும். அதற்கான இடம் தான் படிப்பகம்.படிக்கவில்லை என்றால் இந்த சமூகம் நம்மை ஏமாற்றி விடும்.முதியவர்களும் படிக்க வேண்டும், பிள்ளைகளையும் படிக்கபடிப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். போட்டி தேர்வுகள் எழுதும் அளவிற்கு இந்த படிப்பகத்தை கொண்டு செல்ல பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.