திருவள்ளூர், மார்ச் 24- திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் அப்பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பின் பணம் கேட்ட உரிமையாளர் பாபுவை தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாபு திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் பதிவு செய்து ஆகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் மப்பேடு அடுத்த குன்னத்தூர் காட்டும் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆகாஷை டவுன் போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது திருவள்ளூர் டவுன் ஆய்வாளர் ஒட்டுளர் கலைவாணனை தாக்கிவிட்டு தப்பியோடினாராம். இதனையடுத்து டவுன் ஆய்வாளர் ரவிக்குமார் தப்பியோடிய ஆகாஷை துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஆகாஷை பலத்த காயங்களுடன் மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.