tamilnadu

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர், ஏப்.27-திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே-1 இல் நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கடைப்பிடிக் கப்பட இருக்கிறது. அதனால், அன்றைய நாளில் தமிழ்நாடு மதுபான உரிமம், அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-இன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும். அதேபோல், எப்.எல்-3 மனமகிழ் மன்ற மதுக் கூடங்கள் (கிளப்புகள்), எப்.எல்-3 ஹோட் டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்களையும் மே தினத்தன்று கட்டாயம் மூடப்பட வேண்டும். மேலும், விதிமுறையை மீறி அன்றைய நாளில் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தால் காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.