கிருஷ்ணகிரி, பிப். 20- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு கழிப்பறைகள், சுற்றுச் சுவர் அமைக்க கிருஷ்ண கிரி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரப் பேட்டை அருகிலுள்ள பெரிய தள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை, சுற்றுச் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதையடுத்து மாவட்டச் செயலாளர் இளவரசன் தலை மையில் மாவட்டக் குழு உறுப்பி னர் லெனின் முருகன், கிளைத் தலைவர் மாரிமுத்து, சுபாஷ், மைக்கேல்ராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த படிவத்தை மனுவாக கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனே நட வடிக்கை எடுகுமாறு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.