tamilnadu

img

உள்ளாட்சித் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நிலுவைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

திருவள்ளூர், செப். 11-  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளில் பணி யாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர் ஆகியோருக்கு 7 ஆவது ஊதிய குழுவின்  அரசாணைப்படி 21 மாத  நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியு றுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் மீஞ்சூர் பிடிஒ அலுவலகம் முன்பு செவ்வா யன்று (செப்.9)   காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஊழியர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்  30 ஊராட்சிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  ரூ 25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மற்றவர்க ளுக்கு அடுத்த 15 நாட்களில் வழங்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தன், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி, மாதர் சங்க பொரு ளாளர் ஏ.பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.