திருவள்ளூர், ஜூலை 6- அரசு பள்ளிகளை பாது காக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்மையில் திருச்சி வரை சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சூரியா மற்றும் 7-மாணவிகள் உட் பட 17-மாணவர்கள் திருவள் ளுர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். இந்த சைக்கிள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்திய மணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா மற் றும் கருத்தரங்கம் சோழவரம் அருகில் உள்ள சோலையம் மன் நகரில் வெள்ளியன்று (ஜூலை 5) நடைபெற்றது. இதற்கு மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் என்.தினேஷ் தலைமை தாங்கினார். இதில் மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.திலீபன், மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.திவ்யபாரதி, முன்னாள் தலைவர்கள் எம். தேவேந்திரன், என்.கங்கா தரன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. மதன், மாவட்டச் செயலாளர் எஸ். தேவா ஆகியோர் பேசி னர். இதில் மாணவர் சங்கத் தின் முன்னாள் மாநில செய லாளர் எஸ். கண்ணன் கருத்த ரங்கில் உரையாற்றும் போது தமிழகத்தில் குடி தண்ணீ ருக்காக காலி குடங்களுடன் அலைந்து கொண்டு இருக்கி றோம்.தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல அரசு பள்ளிகளும் முக்கியம். அரசு பள்ளிகளை பாது காக்க சைக்கிள் பிரச்சா ரத்தில் இஸ்ரோ இளம் பெண் விஞ்ஞானி உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்வி மீது அனைவருக்கும் ஒரு நாட்டம் வேண்டும். இல்லை யென்றால் அரசு பள்ளிகளை தனியார் மயமாக்கிவிடு வார்கள். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும். படிப்பு என்பது வேலை வாய்ப்புக்காக மட்டு மல்ல. நல்ல சிந்தனையை தருவதற்காகவும் தான். சாதி, மதம், இனவாதம் என பிரிவினையை ஏற்ப டுத்துவதாகவும், ஆண், பெண்ணை அடக்குவது நல்ல கல்வி முறையாக இருக்க முடியாது.மத்திய அரசின் நவீன குலக்கல்வித் திட்டத்தையும், இந்தி திணிப்பையும் ஒன்றி ணைந்து எதிர்ப்போம் என்றார். முன்னதாக வாலிபர் சங்கம் பாடியநல்லூர் பகுதி அமைப்பாளர் சி.சதிஷ்குமார் வரவேற்றார். கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. சைக் கிள் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.