tamilnadu

வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குக

திருவள்ளூர், டிச.9-  வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் படி வேட்டை க்காரன் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (டிச.8) ஆவடியில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஏழுமலை தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, அகில இந்திய ஆதிவாசி கள் மேடை அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில நிர்வாகிகள் சி.சின்னையா, கவுரி, சீனு, லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் தமிழக அரசின் அர சாணைக்கு இணங்க  விண்ணப்பித்த வேட்டை க்காரன் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும், இலவச தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், வேட்டைக்காரன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடை பெறும் கள ஆய்வை கால தாமதம் செய்யலாம் தொடர்ந்து நடத்த வேண்டும், இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.