tamilnadu

img

அரசின் நிபந்தனைகளை ஏற்காத பி.ஜி.ஆர். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை

திருவள்ளூர், ஆக.5-  அரசின் நிபந்தனைகளை ஏற்காத பி.ஜி.ஆர் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தயாரா என  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பி னார். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பி.ஜி.ஆர் தொழிற்சாலையில் 127 தொழிலாளர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்க ளுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட எதையும் நிர்வாகம் செய்யவில்லை.  மேலும் பிஎப், இஎஸ்ஐ போன்ற எந்த சலுகைகளும் வழங்க வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு-ல் இணைந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பி.ஜி.ஆர் நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் 13 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோத கதவடைப்பும் செய்தது. இதை கண்டித்து தொழிலா ளர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டு பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று (ஆக.5) பஞ்சட்டியிலிருந்து ஏராள மான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனும தியில்லை எனக் கூறி தொழிற்சாலை க்கு முன்பே ஊர்வலத்தை கவரைப்பேட்டை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த 20-ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொழி லாளர்களின் எந்த கோரிக்கைகளை யும் ஏற்காமல் உள்ள பி.ஜி.ஆர் நிர்வாகம் வெளி ஆட்களை வைத்துக்கொண்டு சட்ட விரோதமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. கோட்டாட்சியர், வட்டாட்சியர், தொழி லாளர் நல ஆணையர்  ஆகியோர் அறிவுரைகளையும் நிர்வாகம்  ஏற்கவில்லை. அரசின் உத்தரவை ஏற்காத  பிஜிஆர் தொழிற்சாலையின் மின்சாரம், தண்ணீரை நிறுத்த வேண்டும். தொழிற்சாலை நிர்வாகம் சட்ட ரீதியாக செயல்பட வேண்டும்.  போராட்டங்களை தூண்டியதே நிர்வாகம் தான்.  சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இதுவரை  தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் நித்தியா னந்தம் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.விஜயன், மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் ஏ.எஸ்.குமார், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜே.அருள் ஆகியோர் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உட்பட பலர் குடும்பத்து டன் கலந்து கொண்டனர்.