tamilnadu

டெங்கு கொசு உற்பத்தி திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருத்தணி, அக்.17-  திருத்தணி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம்,  21 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து, மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட 7 பேர் கொண்ட குழுவினரும் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு இரண்டு வார்டு வீதம் நேரில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதனன்று ஆணையர் தலைமையி லான குழுவினர் திருத்தணி ரயில் நிலையம் சென்றனர். அங்கு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில், முதல் நடை மேடையில் நிலைய அதிகாரி அறைக்கு முன் வைத்திரு ந்த தீயணைப்பு வாளியில், டெங்கு கொசுப் புழு வளர்ந்துள்ளதை கண்டு பிடித்து அழித்தனர். இதையடுத்து ஆணையர் ராஜலட்சுமி திருத்தணி ரயில் நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதே போல் டெங்கு கொசு புழு இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளுக்கு அபராதம் வசூலிக்க ப்படும் என தெரி வித்துள்ளார்.