திருவள்ளூர், டிச.31- உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எந்த விதமான விதி மீறலும் நடை பெறாத வகையில், நேர்மை யாக நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச. 27,30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு கள் எண்ணப்படும் போது எந்த விதமான விதி மீறல்களு க்கும் இடமளிக்காத வகை யில் நேர்மையாக நடை பெற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடித்தவுடன் காலம் கடத்தாமல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். வெற்றி பெற்ற தற்கான சான்றிதழை உடனே வழங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும் கட்சியினர் தங்க ளுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையில் முறை கேடு செய்து, தங்களுக்கு சாதகமாக முடிவுகளை அறிவிக்க கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணை யம் குறிப்பிட்டுள்ள அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத் தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்வதோடு, மாநில தேர்தல் ஆணையம் வழிக்காட்டியுள்ள அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படு த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் செவ்வாயன்று (டிச.31) நேரில் மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது, மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர் செல்வம், கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஆகியோர் உடனிருந்தனர்.