சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் நினைவாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஜூன்-14) திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். தேவேந்திரன், பொருளாளர் எஸ். கலையரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.விஜயகாந்த், சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், கட்டுமான சங்க தலைவர் எஸ். செந்தில்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எஸ். மோசஸ்பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.