திருத்தணி, மே 11-திருத்தணியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை உதவி ஆய்வாளரை தாக்கிய அதிமுக பிரமுகர்மகன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.திருத்தணி, பஜார் வீதி மா.பொ.சி. சாலையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அதனை காவல்துறையினர் நிறுத்துமாறு கூறினர். டிராக்டர் ஓட்டுநர் நிற்காமல் சென்றார். இதையடுத்து உதவி ஆய்வாளர் சரவணன், டிராக்டரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தார்.இதுபற்றி அறிந்ததும் டிராக்டர் உரிமையாளரான அவூரை சேர்ந்த அதிமுக. ஊராட்சி செயலர் வாசு, அவரது மகன் சசிதரன் ஆகியோர் சரவணனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்டமோதலில் வாசு, அவரது மகன் சசிதரன், டிராக்டர் ஓட்டுநர் தெக்கலூரை சேர்ந்த வெங்கடேசன், கடை ஊழியர் தாஸ் ஆகியோர் சேர்ந்து உதவி ஆய்வாளர் சரவணனை தாக்கினர். மேலும் காவல்நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து உதவி ஆய்வாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாசு, சசிதரன், வெங்கடேசன், தாஸ் ஆகிய4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.