திருப்பூர்:
பொது முடக்கம் காலத்தில் திருப்பூர்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசியுடன் தவித்திருக்கும் ஆதரவற்றோர், நோயாளிகள், உறவினர்கள் என 500 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி மையத்தைச் சேர்ந்தோர் தினமும் உணவு தானம் செய்து வருகின்ற னர்.உடுமலைபேட்டை, தாராபுரம், வேலம்பாளையம், பல்லடம், திருப்பூர் வடக்கு மாநகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரோனா தடுப்பு உதவி மையத்தின் தொண்டர்கள் நன்கொடையாளர்கள் மூலம் நிதியுதவி பெற்று உணவு தயாரித்து வருகின்றனர்.
உடுமலைப்பேட்டையில் கட்சியின்நகரச் செயலாளர் கே.தண்டபாணி தலைமையில், கருப்பசாமி, பொன்னுசாமி, அப்துல் ரகுமான் உள்ளிட்டவர்கள் கடந்த 18 நாட்களாக இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடக்கத்தில் நகரில் ஆதரவற்றவர்களுக்கு உணவுவழங்கினர். தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின்உதவியாளர்களாக தங்கி இருப்பவர் களுக்கு எவ்வித உதவியும் இல்லாத நிலையில் அவர்கள் 30 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
அதேபோல், தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் பொன்னுசாமி, குப்புசாமி, சீரங்கராயன், மோகன், சுப்பிரமணி உள்ளிட்டோர் உணவு தானத்தில் ஈடுபட்டுள்ள னர். அரசு மருத்துவமனை பகுதியில் பட்டினி கிடப்போருக்கு கடந்த 11 தினங்களாக இவர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.கடந்த 25 ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக பல்லடம் மாநகரப் பகுதியில் ஆதரவற்றோர், தனிமைப்படுத்தப் பட்டு இருப்போர் என 50 பேருக்கு மதியம் மற்றும் இரவு வேலை உணவைஉதவி மையத்தின் சார்பில் வழங்கி வருகின்றனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரவீன், முருகேசன், ரகுமான், சுதாகர், தீனா உள்ளிட்டோர் உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலம்பாளையம் நகரப் பகுதியில்உணவு வழங்குவது, கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் தயாரித்து வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 தினங்களாக இந்த பணி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. 70 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் சென்று உணவு தேவைப்படுவோருக்கு பொட்டலங்களை வழங்குவதுடன், மருந்து மாத்திரை தேவைப்படுவோருக்கு அவற்றை வாங்கி கொடுக்கின்றனர். வாலிபர் சங்க நிர்வாகி ராம்கி, மார்க்சிஸ்ட் கட்சி நகர்க்குழு உறுப்பினர் சின்னசாமி, பாத்திர சங்கத் தலைவர் ஆறுமுகம், வாலிபர் சங்க நிர்வாகி பகத்சிங் என்கிறசதீஷ், மாணவர் சங்க நிர்வாகி ஹரிஉள்பட இளைஞர்கள் 30 பேர் இப்பணியில் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். சாந்தி, சஹானா என்ற இரு பெண் தோழர்கள் மூலிகை தேநீர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.திருப்பூர் வடக்கு மாநகரம் முருங்க பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் வாஞ்சி ரவி ஏற்பாட்டில்கடந்த ஒரு வார காலமாக தினமும் 50 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. உதவி மையத்தைச் சேர்ந்த நந்தகோபால், ஞானவேல், பாலகுமார் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் தெற்கு மாநகரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வை.ஆனந்தன், வடக்கு நகரச் செயலாளர் செந்தில், மாநகரச் செயலாளர் சி.பானுமதி, சிறுபான்மை அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம் ஷா, மினி, சேட்டு மற்றும் ஆட்டோ சங்க சிவராமன் வாலிபர் சங்கநிர்வாகிகள் உமாசங்கர், சதீஷ், கார்த்தி உள்ளிட்டோர் உணவு தயாரித்து,விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 250பேருக்கு இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உதவியாளராக இருப்போர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும், ரயில் நிலையம், ஊத்துக்குளி சாலைஉள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில்ஆதரவற்றோருக்கும் இரவு உணவை இவர்கள் வழங்கி வருகின்றனர்.திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உணவு தானம் வழங்கும் பணியில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள், தலைவர் சதீஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சந்தோஷ் உள்ளிட்டோர் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆதரவற்றோர், முதியோர், தொற்று பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்போர், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தோர் என தினமும் 80 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா உதவி மையப் பணிகளை மேலும் சிறப்பாக நிறைவேற்று வதற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவியும், பொருள் உதவியும் செய்து வருகின்றனர். வாலிபர் சங்க வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷின் மகன் சந்தோஷ் தனது சிறுசேமிப்பின் மூலம் சேர்த்து வைத்திருந்த ரூ.2300-ஐ ஆர்வமுடன் வழங்கினார். இது தவிர புதிதாக சில பகுதிகளி லும் உணவு தானம் வழங்குவதற்கு உதவி மையத்தினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுவரை நாளொன்றுக்கு 500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விதமான உதவிப் பணிகளில் ஒன்றாக, அவிநாசி கொரோனா வார்டு தயார் செய்யும் பணியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்வமுடன் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி கொரோனா தடுப்புஉதவி மையத்தின் அரவணைப்பும், நம்பிக்கையும் மிக்க பன்முகமான பணிகள் மாநகர மக்களின் இதயங்களை வென்று வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த பணியைப் பார்த்து தங்களால் இயன்ற உதவியை இன்முகத்துடன் வழங்கி க்கப்படுத்துகின்றனர். உற்சாகத்துடன் இப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.