திருப்பூர்,அக்.04- உடுமலை அருகே சுற்றுலா தவற விட்ட தங்கச் சங்கிலியை பத்திரமாக மீட்டுக் கொடுத்த சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலை பண்ணையில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட தங்கச் சங்கிலி கீழே கிடந்ததைப் பார்த்து அதனைப் பத்திரமாக முதலைப் பண்ணை நிர்வாகத்திடம் இரண்டு சிறுவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
பொறுப்புடன் செயல்பட்ட சரவணன்கிரி மற்றும் பிரதீஸ் ஆகிய சிறுவர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.