அவிநாசி, செப்.17- அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கோவை மாவட்ட தலைவர் வெ.செந்தில் குமார் திருவண்ணா மலை மாவட்டத்திற்கும், கோவை மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணி புரிந்த வந்த சங்க நிர்வாகிகள் மூவர் வேறு மாவட்டங்களுக்கும் இட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா கவும், பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இம்மாறுதல் களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் வட்டார கிளை தலைவர் ஏ.வெள்ளிங்கிரி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.செந் தில்குமார், மாவட்ட துணை தலைவர் பி.ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.