tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி உண்ணாநிலை போராட்டம் அறிவிப்பு

மதுரை, பிப்.23- போராட்டங்களில் ஈடு பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழி வாங்கும் ஒழுங்கு நடவடிக் கைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள்  தொடர் முழக்கப் போராட் டத்தில் ஈடுபடப்போவதாக   தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறி வித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில்  மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடை பெற்றது. பொதுச் செய லாளர் ச.மயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட னர். கூட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது- 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பைத் தமிழக அரசு திரும்பப் பெற்றதை வர வேற்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டதாக தமிழ்நாடு முழு வதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது 21 மாவட்டங்களில் காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள தால் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர்கள்-அரசு ஊழி யர்கள் மீதான ஒழுங்கு நட வடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கை களைத் தமிழக அரசு உடன டியாக திரும்பப் பெறக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை. இதை யடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 26 ஆம் தேதி  சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.