tamilnadu

img

சவால்கள் நிறைந்த சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் பெண்கள் வெற்றி பெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பேச்சு

திருப்பூர், மார்ச் 7 – சமுதாயத்தில் பெண்களுக்கு நாள் தோறும் எண்ணற்ற சவால்கள் நிறைந் துள்ளன. இவற்றைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு பெண்கள் வெற்றி பெற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறி னார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது: பெண்களை பெருமைப் படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தின விழா, திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதனின் அனைத்து தேவைகளுக்கும் பெண்களே முழு முதற் காரணியாக இருக்கின்றனர். சமுதாயம் பெண்களுக்கான பாதுகாப்பை யும் மற்றும் அனைத்து வகையான உரி மைகளையும் வழங்கி உள்ளது. நமது மாநிலத்தில் தமிழக அரசானது பெண்க ளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில்  கல்விக்கென அதிக முக்கி யத்துவம் அளித்து அதற்கேற்ப வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சமுதா யத்தில் பெண்களுக்கு நாள்தோறும் எண் ணற்ற பல சவால்கள் நிறைந்துள்ளன. இவற்றை தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும்.  பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை கொண்டு, ஆரோக்கியத்துடன் இருக்க  வேண்டும் என்றார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி நடந்த பேச்சு, பாட்டு, இசை நாற்காலி, கவிதை மற்றும் கோலம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்  மற்றும் பரிசுகளை ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.   இதில் மகளிர் திட்ட அலுவலர் கோமகன், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுவர்த்தினி, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.