tamilnadu

சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்திடுக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 2 – கொரோனா ஊரடங்கு காரண மாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தி னருக்கு சுயஉதவிக் குழு கடன்க ளைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஊரடங்கு காரணமாக வேலை, வருமானம் இல்லாமல் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை உடனே தொடங்கி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை நகரங்க ளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி யில்லா கடன் வழங்குவதுடன்,  முந்தைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

குடும்பங்களுக் குத் தேவையான காய்கறி, மளி கைப் பொருட்களை ரேசன் கடைக ளில் மலிவு விலையில் வழங்க வேண் டும்.  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கி வந்த நாப்கின்களை தொடர்ந்து வழங்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதுடன், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதுடன், குடும்ப வன்முறை வழக்குகளில் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு அறை கூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம், தோட்டத்துப்பாளை யம் பகுதியில், மாதர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலா ளர் பானுமதி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் மங்கலட்சுமி, ஒன்றி யக்குழு உறுப்பினர் மீனாட்சி, கண் ணம்மா, சுலோசனா, கோமதி உள் ளிட்ட மாதர் சங்கத்தினர் பங்கேற் றனர். அதேபோல் வேலம்பாளை யத்திலும் பெண்கள் கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதில் நகரப்பொருளாளர் முன்னாள் கவுன்சிலர் குணசுந்தரி, கிளைச் செயலாளர் அழகு, தலைவர் வசந்தி மற்றும் ருக்மணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சேலம்
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் என்.ஜெய லட்சுமி, மாவட்ட துணை செயலா ளர் கே.ராஜாத்தி, ஒன்றிய செய லாளர் ஜு.கவிதா உட்பட பலர் பங் கேற்றனர்.